Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அளவில் தற்கொலை விகிதம் சரிவு

உலக அளவில் தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் சரிந்துள்ளது. 1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால், அது மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகக் குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -
உலக அளவில் தற்கொலை விகிதம் சரிவு

கோப்புப் படம்: AP

உலக அளவில் தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் சரிந்துள்ளது. 1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால், அது மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமாகக் குறைந்துள்ளது.

தற்கொலையை முக்கியமான பொதுச் சுகாதார விவகாரமாக உலகச் சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

ஆண்டுதோறும் குறைந்தது 800,000 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அது மதிப்பிடுகிறது.

2016ஆம் ஆண்டில் சுமார் 817,000 பேர் தற்கொலை செய்து கொண்டதாக BMJ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

1990ஆம் ஆண்டுக்குப் பிந்திய நிலையோடு ஒப்புநோக்க அது 6.7 விழுக்காடு அதிகம்.

இருப்பினும் கடந்த 30 ஆண்டுகளில், மக்கள்தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. 

மக்கள்தொகை உயர்வுக்கும் வயதுக்கும் ஏற்றவாறு கணக்கிடும்போது, தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் கிட்டத்தட்ட 33 விழுக்காடு, அதாவது மூன்றில் ஒரு பங்கு குறைந்தது.

தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம், 100,000  பேருக்குச் சுமார் 16ஆக இருந்து இப்போது 11.2 ஆகக் குறைந்துள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்