Images
  • suicide
    கோப்புப் படம்: AP

40 விநாடிகளுக்கு ஒருமுறை ஒரு தற்கொலை நிகழ்கிறது: WHO

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

உலகில் 40 விநாடிகளுக்கு ஒருமுறை ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

போரில் மடிவோரின் எண்ணிக்கையைவிடத் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று அது குறிப்பிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறனர்.

இந்த எண்ணிக்கை அண்மைக் காலமாக உலகளவில் குறைந்துவந்தாலும், சில நாடுகளில் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

2010 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் தற்கொலைகளின் எண்ணிக்கை 6 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தற்கொலை தவிர்க்கக்கூடியது என்றும் மக்களிடையே தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவேண்டும் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

Top