Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொரோனா கிருமித்தொற்றுக்கு இடையே ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்

COVID-19 பரவல் சூழலை எதிர்கொண்டுவரும் வேளையில் நாம் கவனிக்காத ஆச்சர்யமூட்டும் சில தகவல்களை ஆராய்ந்து தொகுத்திருக்கிறது அமெரிக்காவின் Forbes சஞ்சிகை.

வாசிப்புநேரம் -
கொரோனா கிருமித்தொற்றுக்கு இடையே ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்

(படம்: Reuters)

COVID-19 கொரோனா கிருமி உலகெங்கும் பல நாடுகளுக்குப் பரவி மக்களை உலுக்கிவருகிறது.

உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளன. 

COVID-19 பரவல் சூழலை எதிர்கொண்டுவரும் வேளையில் நாம் கவனிக்காத ஆச்சர்யமூட்டும் சில தகவல்களை ஆராய்ந்து தொகுத்திருக்கிறது அமெரிக்காவின் Forbes சஞ்சிகை.

  • பிப்ரவரி 3ஆம் தேதிக்கும் பிப்ரவரி 23ஆம் தேதிக்கும் இடையே, சீனாவின் கரியமில வாயு வெளியேற்றம் 150 மில்லியன் மெட்ரிக் டன் குறைந்திருக்கிறது (அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில்) (ஆதாரம்: Carbon Brief)
  •  காணொளி வழிக் கூட்டம் நடத்த வகைசெய்யும் மென்பொருளை வடிவமைத்துள்ள Zoom Video Communications நிறுவனத்தின் பங்குவிலை 20 நாள்களில் சுமார் 40 டாலர் அதிகரித்துள்ளதாம். உலகின் பல நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதால், பல கூட்டங்களும், கருத்தரங்குகளும் காணொளி வழி நடத்தப்படுகின்றன.
  • Coca-Cola நிறுவனத்தின் மூன்றாவது மிகப் பெரிய சந்தை சீனா. கொரோனா கிருமிப் பரவலால் நிறுவனத்தின் பங்கு இலாபம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • COVID-19 அச்சமூட்டும் பரவல்; இருப்பினும், மோசமான கொள்ளை நோய்களை உலகம் சந்தித்திருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோயில், சுமார் 75 மில்லியன் பேர் மாண்டனர். 1918-இல் உலகில் பரவிய காய்ச்சலில் 50 மில்லியன் பேர் மாண்டனர். 1957ஆம் ஆண்டு ஏற்பட்ட H2N2 சளிக்காய்ச்சலில் 1.1மில்லியன் பேர் மாண்டனர்.
  • சீனாவின் Douyu காணொளி விளையாட்டுத் தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பல மில்லியன் அதிகரித்திருக்கிறது. பலர் வீட்டுக்குள்ளேயே இருப்பதால் இந்த மாற்றம் என்று கூறப்பட்டது.
  • அமெரிக்காவில் சீன உணவகங்களுக்குச் சென்று உணவு உட்கொள்வோர், உணவகங்களிலிருந்து வீட்டுக்கு உணவு தருவிப்போர், இணையம்வழி உணவு வாங்குவோர் ஆகியோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்