Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவி விலகல்

சுவீடனின் முதல் பெண் பிரதமர் மெக்டலினா ஆண்டர்சன் (Magdalena Andersson) பதவி விலகியிருக்கிறார். பதவியேற்ற சில மணிநேரத்தில் அவர் பொறுப்பைத் துறந்தார்.

வாசிப்புநேரம் -
சுவீடனின் முதல் பெண் பிரதமர் பதவி விலகல்

(படம்: AFP)

சுவீடனின் முதல் பெண் பிரதமர் மெக்டலினா ஆண்டர்சன் (Magdalena Andersson) பதவி விலகியிருக்கிறார். பதவியேற்ற சில மணிநேரத்தில் அவர் பொறுப்பைத் துறந்தார்.

அவர் முன்வைத்த வரவுசெலவுத் திட்டம் எதிர்த்தரப்புக்குச் சாதகமாய் இருந்ததால் ஆளும் கூட்டணியின் பசுமைக் கட்சி அதை நிராகரித்தது. எனவே 54 வயது திருவாட்டி ஆண்டர்சன் பதவி விலக முடிவெடுத்தார்.

சட்டபூர்வ நடைமுறையைக் கேள்விக்குள்ளாக்கும் அரசாங்கத்தை வழிநடத்த விரும்பவில்லை என்று அவர் சொன்னார்.

தனித்தலைவராக, சமூக ஜனநாயகக் கட்சியை வழிநடத்த ஆர்வமாய் இருப்பதாகத் திருவாட்டி ஆண்டர்சன் கூறினார்.

பொருளியல் நிபுணரான அவர், பிரதமராவதற்கு முன், நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

-Reuters  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்