Images
  • grenade
    (படம்: Reuters/Arnd Wiegmann)

சுவீடன்: பாலர் பள்ளிக்குக் கையெறி குண்டைக் கொண்டுவந்த சிறுவன்

சுவீடனில் சிறுவன் ஒருவன் தம்முடைய பாலர் பள்ளிக்குக் கையெறி குண்டைக் கொண்டுவந்ததால் பெரும் பதற்றம் உண்டானது.

ராணுவத்தின் துப்பாக்கி சுடும் இடத்தில் கண்டெடுத்த கையெறி குண்டை நண்பர்களிடம் காட்டுவதற்காகச் சிறுவன் அதனைப் பள்ளிக்குக் கொண்டுவர, ஆசிரியர் பயந்துபோய் காவல்துறையை உதவிக்கு அழைத்தார்.

சிறுவனிடம் இருந்த கையெறி குண்டு மிகவும் ஆபத்தானது என்று காவல்துறையினர் கூறினர்.

அது வெடித்திருந்தால் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்று காவல்துறையின் பேச்சாளர் கூறினார்.   

Top