Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவிட்சர்லந்தில் கடுமையான நாடளாவிய கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லந்தில் கடுமையான நாடளாவிய கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள்

வாசிப்புநேரம் -
சுவிட்சர்லந்தில் கடுமையான நாடளாவிய கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள்

(கோப்புப் படம்: REUTERS/Sergio Perez)

சுவிட்சர்லந்து அரசாங்கம், நாடளாவிய கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கவுள்ளது. இன்று முதல், நடன விடுதிகள் மூடப்படவுள்ளன.

நேரடியாக நடத்தப்படும் பல்கலைக்கழக வகுப்புகள், அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும்.
பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்ய முடியாத இடங்களில், முகக்கவசம் அணிவது கட்டாயம்.

நிகழ்ச்சிகளில் 50 அல்லது அதற்கும் குறைவானவர்கள் மட்டுமே பங்கேற்கமுடியும்.

15 பேருக்கும் மேல் பங்கேற்கும் விளையாட்டு, கலாசார நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படும்.

மதுபானக் கூடங்களும் உணவகங்களும் இரவு 11 மணிக்கு மூடப்படவேண்டும்.

புதிய கட்டுப்பாடுகள் எப்போது முடிவுக்குவரும் என்று சுவிட்சர்லந்து அரசாங்கம் தெரிவிக்கவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில், 8,600க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்