Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பள்ளி செல்வதைத் தவிர்க்க, பொய்யான COVID-19 பரிசோதனை முடிவுகள் - சுவிஸ் மாணவர்கள் மீது நடவடிக்கை

பள்ளி செல்வதைத் தவிர்க்க சுவிட்ஸர்லந்தின் பேசல் (Basel) நகரைச் சேர்ந்த 3 மாணவர்கள், தங்களுக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பதாகப் பொய் சொல்லி மாட்டிக்கொண்டனர்.

வாசிப்புநேரம் -

பள்ளி செல்வதைத் தவிர்க்க சுவிட்ஸர்லந்தின் பேசல் (Basel) நகரைச் சேர்ந்த 3 மாணவர்கள், தங்களுக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பதாகப் பொய் சொல்லி மாட்டிக்கொண்டனர்.

தங்களுக்குக் கிருமித்தொற்று இருப்பதாக COVID-19 தடங்களைக் கண்டறியும் செயலியிலிருந்து தகவல் வந்துள்ளதாய் போலிக் குறுஞ்செய்திகளைக் காட்டி அவர்கள் பள்ளியை ஏமாற்றினர்.

அதனால், அவர்களுடன் படிக்கும் சுமார் 25 மாணவர்கள் 10 நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம்.

சென்ற மாதம், வசந்தகால விடுமுறைக்கு முன் நடந்த அந்த ஏமாற்று வேலையால், சில ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர்.

அது சிறு பிள்ளைகளின் குறும்புச்செயல் அல்ல. கடுமையான சம்பவம் என்று அந்தப் பள்ளியின் பேச்சாளர் அந்நாட்டின் Blick செய்தித்தாளிடம் கூறினார்.

அந்த மூவர் மீதும் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வர பள்ளி திட்டமிடுகிறது.

எனினும், அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

- Reuters/zl

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்