Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவிட்ஸர்லந்து: சம ஊதியம் கோரி பெண்கள் அணிவகுப்பு

சுவிட்ஸர்லந்தில் பெண்கள் சம ஊதியம் பெறுவதை வலியுறுத்தி இன்று (ஜூன் 14) அணிவகுப்பு நடத்தவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சுவிட்ஸர்லந்து: சம ஊதியம் கோரி பெண்கள் அணிவகுப்பு

படம்: AFP/Fabrice Coffrini

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சுவிட்ஸர்லந்தில் பெண்கள் சம ஊதியம் பெறுவதை வலியுறுத்தி இன்று (ஜூன் 14) அணிவகுப்பு நடத்தவுள்ளனர்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது சுவிட்ஸர்லந்தில் பெண்கள் ஆண்களைவிட  சுமார் 20 விழுக்காடு குறைவாக ஊதியம் பெறுகின்றனர்.

ஒரே வேலையைப் பார்க்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் கொடுக்கப்படும் ஊதியத்தில் 8 விழுக்காடு வரை வேறுபாடு உள்ளது.

பெண்களுக்கு நடக்கும் வன்முறையை எதிர்ப்பது, சமத்துவம் வேண்டுவது ஆகியவை வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்.

பெண்கள் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கின்றனர்.

அவர்கள் நீண்ட மதிய இடைவேளையும் எடுத்துக்கொள்வவிருக்கின்றனர்.

அந்நாட்டு ஊடகம் நடத்திய கருத்தாய்வு முடிவுகள்படி 63.5 விழுக்காடு மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுவிட்ஸர்லந்து நாடாளுமன்றமும் 15 நிமிட இடைவேளை எடுக்கவுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்