Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை சிரியாவின் இரசாயன ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல்: அதிபர் டிரம்ப்

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியாவின் இரசாயன ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.  

வாசிப்புநேரம் -
அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை சிரியாவின் இரசாயன ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல்: அதிபர் டிரம்ப்

(படம்: AFP)

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியாவின் இரசாயன ஆயுதக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தைக் குறி வைத்து, அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் திரு. டிரம்ப் கூறினார்.

சிரியா அரசாங்கம் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்பதே அந்தத் தாக்குதலின் நோக்கம் என்றார் திரு டிரம்ப்.

அண்மையில், சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயனத்
தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்டோர் பலியானதைத் தொடர்ந்து, அந்த பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சிரியாவில் நிகழும் இரசாயன ஆயுதத் தாக்குதலைத் தடுப்பதற்கு இதை விட வேறு நடைமுறைக்குரிய வழி இல்லை என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்