Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிரியாவில் இரசாயன ஆயுதங்களைப் பார்வையிட்ட அனைத்துலக நிபுணர்கள்

சிரியாவின் டோமா நகரிலிருந்து கிடைக்கப்பெற்ற இரசாயன ஆயுதங்களை, அனைத்துலக நிபுணர்கள் முதன்முறையாக பார்வையிட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
சிரியாவில் இரசாயன ஆயுதங்களைப் பார்வையிட்ட அனைத்துலக நிபுணர்கள்

(படம்: AFP/Stringer)

சிரியாவின் டோமா நகரிலிருந்து கிடைக்கப்பெற்ற இரசாயன ஆயுதங்களை, அனைத்துலக நிபுணர்கள் முதன்முறையாகப் பார்வையிட்டுள்ளனர்.

அங்கு, நச்சுத்தன்மை மிகுந்த விஷ வாயு கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தாக்குதலில், இரண்டு வாரங்களுக்கு முன்னர், பலர் கொல்லப்பட்டனர்.

அந்தச் சம்பவத்தின் தொடர்பில் ஆதாரங்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்று அனைத்துலக நிபுணர்கள் அக்கறை தெரிவித்திருந்த வேளையில், விசாரணை நடைபெற்றது.

இருப்பினும், இரசாயனக் கழிவுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் விசாரணைக்குப் பேருதவியாய் இருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

அந்த ஆதாரங்கள், நெதர்லந்து எடுத்துச் செல்லப்பட்டுப் பரிசோதிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்