Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எல்லைப் புற நகரைத துருக்கியிடம் இழக்கவில்லை - மறுப்புத் தெரிவிக்கும் குர்தியப் படையினர்

சிரியாவில் தங்கள் வசமுள்ள பகுதியைத் துருக்கியிடம் இழக்கவில்லை என்று குர்தியப் படையினர் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
எல்லைப் புற நகரைத துருக்கியிடம் இழக்கவில்லை - மறுப்புத் தெரிவிக்கும் குர்தியப் படையினர்

(படம்: Reuters)

சிரியாவில் தங்கள் வசமுள்ள பகுதியைத் துருக்கியிடம் இழக்கவில்லை என்று குர்தியப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சிரியா - துருக்கி எல்லையில் உள்ள ராஸ் அல் அய்ன் வட்டாரம் இன்னமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகக் குர்தியப் படையினர் கூறினர்.

முன்னதாக அந்த வட்டாரத்தைக் கைப்பற்றி விட்டதாகத் துருக்கி அறிவித்திருந்தது. அது உண்மையென்றால், குர்தியப் படையினருக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கிய நான்கு நாட்களுக்குள் ராஸ் அல் அய்ன் வட்டாரத்தைத் துருக்கி தன் வசமாக்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

குர்தியப் படையினருக்கு எதிராகக் கடந்த நான்கு நாட்களாக துருக்கி நடத்திவரும் தாக்குதலில் பொதுமக்கள் முப்பது பேர் கொல்லப்பட்டனர்.

அந்த நடவடிக்கை காரணமாக சுமார் இருநூறாயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நாடிச் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்