Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 ஓராண்டு நிறைவையொட்டி... ஊசி உருவத்தில் கேக்குகள்!

ஊசிகளா கேக்குகளா?

வாசிப்புநேரம் -
COVID-19 ஓராண்டு நிறைவையொட்டி... ஊசி உருவத்தில் கேக்குகள்!

(படம்: REUTERS/Leon Kuegeler)

ஊசிகளா கேக்குகளா?

கொரோனா கிருமிப்பரவல் தொடங்கி, ஓராண்டு ஆகிவிட்டது.

அதனை ஒட்டி, ஜெர்மனியிலுள்ள டார்ட்மண்ட் நகரில் Schuerner's Baking Paradise என்ற கேக் கடை, ஊசி வடிவத்தில் கேக்குகளைச் செய்து விற்கிறது!

சென்ற ஆண்டு முடக்கநிலை அறிவிக்கப்பட்டபோது, பலரும் வீட்டுக்குத் தேவையானவற்றை அதிக அளவில் வாங்கிக் குவித்தனர். அதனையடுத்து, அத்தியாவசியப் பொருள்கள் பலவற்றுக்குத் தட்டுப்பாடு உருவானது.

அதைப் பிரதிபலிக்கும்வகையில் அந்தக் கேக் கடை, கழிப்பறைத் தாள் சுருள் போன்ற உருவத்தில் செய்யப்பட்ட கேக்குகளை விற்றுப் பிரபலமானது.

அதைப்போல, இம்முறையும் வித்தியாசமாக ஏதேனும் செய்ய நினைத்தது கடை.

ஊசியைப் போன்ற கேக்கை விற்க, கடை உரிமையாளர் டிம் கார்ட்டியம் (Tim Kortuem) சற்றுத் தயங்கியதாகக் கூறினார்.

"ஆரம்பத்தில் ஊசி போன்ற கேக், சற்றுக் கொடூரமான யோசனையாகத் தோன்றியது. ஆனால், அதைச் செய்து பார்த்தபின், சற்று வேடிக்கையாக இருந்தது. எவ்விதப் பக்கவிளைவுகளும் இல்லாத ஊசி எங்கள் ஊசிக் கேக் !"

என்றும் அவர் சொன்னார்.

அந்த ஊசிக் கேக்கைச் சாப்பிடுவோருக்குக் கிருமித்தொற்றில் இருந்து பாதுகாப்புக் கிடைக்கப்போவதில்லை.

அதிக அளவில் கேக் சாப்பிட்டால் உடல் எடைதான் கூடும்.

அதனாலென்ன ?

ஆரோக்கியத்துக்காக யாராவது கேக் சாப்பிடுவார்களா ?

ஆனந்தம் அடைவதற்குத்தானே அது !  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்