Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தைவானுடனான அதிகாரத்துவப் பரிமாற்றங்களை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

தைவானுடன் மேற்கொள்ளும் அதிகாரத்துவப் பரிமாற்றங்கள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ளும்படி அமெரிக்காவைச் சீனா வலியுறுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
தைவானுடனான அதிகாரத்துவப் பரிமாற்றங்களை நிறுத்திக்கொள்ளுமாறு அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

(கோப்புப் படம்: REUTERS/Aly Song)

தைவானுடன் மேற்கொள்ளும் அதிகாரத்துவப் பரிமாற்றங்கள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ளும்படி அமெரிக்காவைச் சீனா வலியுறுத்தியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சு அவ்வாறு கூறியது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சின் எரிசக்தி, சுற்றுப்புற விவகாரப் பிரிவுக்கான துணையமைச்சர் கீத் கிரக் (Keith Krach) தைவானுக்குச் செல்லக்கூடும் என்ற தகவல் வெளியானதையடுத்துச் சீன அமைச்சின் கருத்து வெளிவந்துள்ளது.

அண்மை மாதங்களில் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ராணுவப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அவரது பயணம் அமையவிருக்கிறது.

திரு. கீத் கிரக்கின் பயணம் குறித்த தகவலை அமெரிக்காவோ, தைவானோ இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அது உறுதியானால், அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தைவானுக்குச் செல்வது இது இரண்டாவது முறை. சென்ற மாதம் அமெரிக்கச் சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அஸார் (Alex Azar) தைவானுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்