Images
  • taiwan train crash
    (படம்: REUTERS/Ann Wang)

தைவான் ரயில் விபத்து - கடைசி நிமிடக் காட்சிகள் வெளியிடப்பட்டன

தைவானில் சில நாள்களுக்கு முன் நேர்ந்த ரயில் விபத்தின் கடைசி நிமிடக் காட்சிகளை தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

சுரங்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில், சுரங்கத்திற்கு வெளியே தண்டவாளத்தில் விழுந்துகிடந்த கனரக வாகனத்தின் மீது மோதியது.

விபத்துக்கு ஒரு நிமிடம் முன்புதான் கனரக வாகனம் ரயில் தடத்தில் சரிந்தது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த கனரக வாகனம் சாலையிலிருந்து சரிந்து சுரங்கத்திற்கு வெளியே வந்து விழுந்தது.

கனரக வாகன ஓட்டுநர் பிரேக்கை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தண்டவாளத்தில் விழுந்துகிடந்த வாகனத்தைக் கடைசி நேரத்தில்தான் ரயில் ஓட்டுநரால் பார்க்க முடிந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

விபத்தின்போது ரயிலில் சுமார் 500 பயணிகள் இருந்தனர்.

விபத்தில் 50 பேர் மாண்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

மாண்டவர்களில் 2 பேர் அமெரிக்கர்கள், ஒருவர் பிரெஞ்சுக் குடிமகன்.

தைவான் வரலாற்றில் ஏற்பட்ட ஆக மோசமான ரயில் விபத்து இது.

-Reuters 

Top