Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தைவானும் அமெரிக்காவும் கடல்துறை ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன

தைவானும் அமெரிக்காவும் கடல்துறை ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன

வாசிப்புநேரம் -

தைவானும் அமெரிக்காவும் கடல்துறை ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், தைவானுடன் செய்துகொள்ளப்பட்ட முதல் உடன்பாடு அது.

கடலோரக் காவல்படைப் பணிக்குழுவை அமைக்க அந்த ஒப்பந்தம் வகைசெய்யும்.

இரு நாடுகளுக்கு இடையிலான கடல்துறைக் கொள்கைகளை ஒருங்கிணைக்க அந்தப் பணிக்குழு உதவும்.

தைவான் அதன் கடலோரக் காவல்படையை வலுப்படுத்த, புதிய கப்பல்களை வாங்கியுள்ளது.

அந்தக் கப்பல்கள்,போர்க்காலத்தின்போது போர்க்கப்பல்களாக மாற்றப்படக்கூடும்.

அண்மையில் சீன மீன்பிடி, மணல் கப்பல்கள் தைவானின் கட்டுக்குள் இருக்கும் கடற்பகுதியில் அத்துமீறியுள்ளன.

தைவானுடன் மட்டுமின்றி, கிழக்குச் சீனக் கடல் பகுதியில் ஜப்பானுடனும் அரசுரிமை மோதல்கள் ஏற்பட்டுள்ளன;

தென் சீனக் கடற்பகுதியில் பல தென் கிழக்காசிய நாடுகளுடனும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்