Images
  • taliban
    படம்: REUTERS 

ஆப்கானிஸ்தான்: தலிபான் அமைப்பு அனைத்துலக உதவியை நாடுகிறது

ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானப் பேரிடரைத் தவிர்க்க, தலிபான் அமைப்பு அனைத்துலக உதவியையும் அங்கீகாரத்தையும் நாடுகிறது.

ஆகஸ்ட்டில் அமெரிக்கத் துருப்புகள் அங்கிருந்து வெளியானதைத் தொடர்ந்து தலிபான் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அனைத்துலக உதவி நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆப்கானிஸ்தானின் பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வேலையின்மை அதிகரித்ததோடு, உணவுப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த பேராளர்களைத் தலிபான் அமைப்பு இன்று நேரடியாகச் சந்திக்கவுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் பணத்தை நன்கொடையாக வழங்கும்படி உலக நாடுகளை ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் Antonio Guterres கேட்டுக்கொண்டார்.

தலிபான் அமைப்பை ஆப்கானிஸ்தானின் அதிகாரபூர்வ அரசாங்கமாக எந்தவொரு நாடும் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

Top