Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தலிபான் அமைப்பு, ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோருடன் பேச்சை ரத்துசெய்துள்ளார் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தலிபான் அமைப்புடனும் ஆஃப்கானிஸ்தான் அதிபருடனும் நடத்தத் திட்டமிட்டிருந்த சமாதானப் பேச்சை ரத்துசெய்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தலிபான் அமைப்பு, ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோருடன் பேச்சை ரத்துசெய்துள்ளார் அதிபர் டிரம்ப்

(படம்: MANDEL NGAN/AFP)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தலிபான் அமைப்புடனும் ஆஃப்கானிஸ்தான் அதிபருடனும் நடத்தத் திட்டமிட்டிருந்த சமாதானப் பேச்சை ரத்துசெய்துள்ளார்.

அமெரிக்காவின் ஆக நீண்டகாலப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஓர் ஆண்டாக அரசந்திரப் பேச்சுகள் நடந்துவந்தன.

அமெரிக்க அதிபர்கள் தங்கும் இடமான Camp David -டில் இருதரப்பினரையும் சந்திக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.

அமெரிக்கத் தூதரும்,தலிபானும் நகல் சமாதான ஒப்பந்தத்திற்கு இணங்கிய சில நாள்களுக்குப் பிறகுத் திரு. டிரம்ப்பின் அறிவிப்பு வந்துள்ளது.

காபுலில் நடந்த தாக்குதலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரரும், பொதுமக்கள்11 பேரும் கொல்லப்பட்டதற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அதிபர் டிரம்ப் அந்த சந்திப்பை நிறுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்