Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு காலத்தில் நடமாடிய ஒரு மீட்டர் உயரமான கிளி

நியூஸிலந்தில் சுமார் 19 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் ராட்சதக் கிளி ஒன்று வாழ்ந்து வந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஒரு காலத்தில் நடமாடிய ஒரு மீட்டர் உயரமான கிளி

(படம்: AFP / FLINDERS UNIVERSITY / Brian Choo )

நியூஸிலந்தில் சுமார் 19 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் ராட்சதக் கிளி ஒன்று வாழ்ந்து வந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆதிகாலக் கிளி சுமார் 1 மீட்டர் உயரமிருந்ததாக நம்பப்படுகிறது. ஒரு மனிதரின் உயரத்தில் சுமார் பாதி அளவு அது.

பெரிய உடற்கட்டு கொண்ட கிளியால் பறக்க முடியவில்லை என்றும் அது பெரும்பாலும் மாமிசம் உட்கொண்டதாகவும் நம்பப்படுகிறது.

கிளி சுமார் 7 கிலோகிராம் எடை கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

Heracles என்றழைக்கப்படும் ராட்சதக் கிளியின் எலும்புகள் கழுகு அல்லது வாத்து இனத்தைச் சேர்ந்தவை என்று முதலில் நம்பப்பட்டன.

11 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் இவ்வாண்டு சோதிக்கப்பட்ட பிறகு அவை கிளி இனத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்தது.

நியூஸிலந்தில் ராட்சதப் பறவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இது முதல்முறை அல்ல. ஒரு காலத்தில் Moa எனப்படும் 3.6 மீட்டர் உயரமுள்ள பறவை அங்கு வாழ்ந்து வந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்