Images
  • London museum
    படம்: AFP

அரும்பொருளகத்திலிருந்து விழுந்த சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம்

இங்கிலாந்திலுள்ள டேட் மோடர்ன் (Tate Modern) அரும்பொருளகத்தின் 10வது மாடியிலிருந்து எறியப்பட்டதாக நம்பப்படும் சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 4-ஆம் தேதி அன்று பிரான்ஸைச் சேர்ந்த அந்த 6 வயது சிறுவன் 10வது மாடியிலிருந்து 5 மாடிகள் கீழே விழுந்தான்.

அதனால் சிறுவனின் மூளையின் உட்புறத்தில் இரத்தக் கட்டி ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக 17 வயது இளையர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்த வழக்கு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி தொடங்கும்.

சிறுவனால் இன்னும் பேசவோ அசையவோ முடியவில்லை.

ஆனால் சிறுவன் தங்களை நோக்கி சிரிப்பதாக அவனுடைய குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

சிறுவனின் மருத்துவ செலவுகளுக்கு உதவ இதுவரை 54,000 பவுண்ட் (சுமார் 91,630) நிதி திரட்டப்பட்டுள்ளது.  

Top