Images
  • social media
    படம்: AFP/Lionel BONAVENTURE

நெருக்கடி நிலையிலும் சக்கை போடு போடும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

கொரோனா கிருமித்தொற்றால் பொருளியல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள வேளையில், உலகின் ஆகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றன.

Amazon நிறுவனத்தின் விற்பனை கடந்த மூன்று மாதங்களில் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. Apple நிறுவனம் அதன் iPhone கைத்தொலைபேசி விற்பனையில் வளர்ச்சி கண்டுள்ளது.

Facebook, WhatsApp, Instagram தளங்களின் பயனீட்டாளர் எண்ணிக்கை 15 விழுக்காடு அதிகரித்தது.
தொழில்நுட்ப நிறுவனங்களின் அளவும் அவற்றின் பலமும் அண்மைக் காலமாக அணுக்கமாய் கவனிக்கப்படுகின்றன.

அந்த நிறுவனங்கள் தங்கள் பலத்தைக் கொண்டு மற்ற போட்டியாளர்களை அழித்துவிடுகின்றனவா என்று இவ்வாரம் அமெரிக்க அதிகாரிகள் விசாரித்தனர்.

COVID-19 நோய்த்தொற்றினால் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பலம் அதிகரிப்பதாகக் கூறப்பட்டது.

Amazon
நிறுவனம் கடந்த 26 ஆண்டுகளில் காணாத லாபத்தை (5.2 பில்லியன் டாலர்) கண்டுள்ளது. பாதுகாப்பு ஆடைகள், நடைமுறைகளை அறிமுகம் செய்ய நிறுவனம் கூடுதலாகச் செலவிட்டாலும், வெகுவாக அதிகரித்த விற்பனையைச் சமாளிக்க அது 175,000 ஊழியர்களை வேலையில் சேர்த்தது.
Apple
நிறுவனத்தின் மற்ற பொருள்களைக் காட்டிலும் குறைந்த விலையில் விற்கப்படும் iPhone SE அதன் விற்பனை அதிகரிக்கக் காரணம் என்று BBC செய்தி நிறுவனம் சுட்டியது. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான மடிக்கணினிகள், iPad கருவிகளும் அதிகம் விற்பனையாகின.

Facebook
நிறுவனத்தின் தளங்களை முடக்கக் கட்டுப்பாடுகளின்போது பலர் பயன்படுத்தினாலும் நாளடைவில் அந்த எண்ணிக்கை குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கூகள்
கூகள் நிறுவனம் மட்டுமே கடந்த காலாண்டில் இழப்புகளைச் சந்தித்தது. இணைய விளம்பரங்களை வர்த்தகங்கள் குறைத்துக் கொண்டது அதற்குக் காரணம் 

Top