Images
  • tech leaders
    (படம்:FRANCISCO LEONG/AFP)

இன்றைய மின்னிலக்க யுகத்திற்குப் புதிய நன்னடத்தைக் கோட்பாடு தேவை : தொழில்நுட்ப வல்லுநர்கள்

சமூக ஊடகங்களில் பொய்த் தகவல்கள் பரவுவதைத் தடுக்க மேலும் கடுமையான விதிமுறைகள் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போர்ச்சுகலில் நடந்த தொழில்துறை மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட தொழில்நுட்பத் தலைவர்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இன்றைய மின்னிலக்க யுகத்திற்குப் புதிய நன்னடத்தைக் கோட்பாடு தேவை என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் வலியுறுத்தினர்.

சமூக ஊடகங்களைப் பாதுகாப்பான இடமாக மாற்றும் முயற்சியில் 10 விழுக்காட்டை மட்டுமே சாதித்திருப்பதாக ஜனநாயகத் தேசியக் குழுத் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியும் Twitterஇன் முன்னாள் நிர்வாகியுமான ரஃபி கிரிகோரியன் கூறினார்.

அது போதாது என்று தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

சமூக ஊடக நிறுவனங்கள் அவற்றின் செயல்முறையில் உள்ள பாதகங்களை அறிந்திருப்பதாக Twitterஇன் துணை நிறுவனர் ஈவ் வில்லியம்ஸ் கூறினார்.

பொய்யான தகவல்கள், முறைகேடுகள் போன்றவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மேலும் பல முயற்சிகள் எடுக்கப்படலாம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர் என்றார் அவர்.


 

Top