Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கர்ப்பமடைய நெருக்குதலை எதிர்நோக்கும் பதின்ம வயதுப் பெண்கள்

எட்டில் ஒரு பதின்ம வயதுப் பெண், தமது துணையால் கர்ப்பமடையும் நெருக்குதலுக்கு உள்ளாவதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

எட்டில் ஒரு பதின்ம வயதுப் பெண், தமது துணையால் கர்ப்பமடையும் நெருக்குதலுக்கு உள்ளாவதாகக் கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பம் இல்லாதபோதும், பெண்களுக்கு அத்தகைய நெருக்குதல் அளிக்கப்படுவதாகக் கருத்தாய்வின் முடிவுகள் குறிப்பிட்டன.

அமெரிக்காவில் 14 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட 550 பெண்களிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது.

அந்தப் பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடும் ஆண்கள் அந்தப் பெண்களுக்கே தெரியாத வகையில் அவர்களைக் கருவுற முயற்சி மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.

கர்ப்பத் தடை மாத்திரைகளை மறைத்துவைத்தல், ஆணுறையில் துளையிடுதல் போன்றவற்றின் மூலம் பதின்ம வயதுப் பெண்களை அவர்களின் விருப்பத்துக்கு விரோதமாய் கர்ப்பம் தரிக்கச் செய்வதாகக் கருத்தாய்வில் தெரியவந்தது.

அத்தகைய நடவடிக்கைகள் துன்புறுத்தலாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

சில சம்பவங்களில், கருவுற விரும்பாத பெண்கள் உடல்ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

கருவுற விரும்பாத நிலையில், உறவைத் துண்டித்துக்கொள்ளப் போவதாக ஆண்கள் மிரட்டுகின்றனர் என்று ஆய்வில் பங்கேற்ற இளம்பெண்கள் குறிப்பிட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்