Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜார்ஜ் ஃபுளோய்ட்டின் மரணத்தைக் காணொளியாகப் பதிவுசெய்த இளையருக்கு செய்தி விருது

அமெரிக்கக் கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்ட்டின் (George Floyd) மரணத்தைக் காணொளியாகப் பதிவுசெய்த இளையர் டார்னெல்லா ஃப்ரேஸருக்கு (Darnella Frazier) சிறப்பு செய்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜார்ஜ் ஃபுளோய்ட்டின் மரணத்தைக் காணொளியாகப் பதிவுசெய்த இளையருக்கு செய்தி விருது

(படம்: REUTERS)

அமெரிக்கக் கறுப்பின ஆடவர் ஜார்ஜ் ஃபுளோய்ட்டின் (George Floyd) மரணத்தைக் காணொளியாகப் பதிவுசெய்த இளையர் டார்னெல்லா ஃப்ரேஸருக்கு (Darnella Frazier) சிறப்பு செய்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செய்தித் துறையைக் கௌரவிக்கும் புகழ்பெற்ற Pulitzer விருது நிகழ்ச்சியின்போது ஃப்ரேஸருக்கு அந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.

அவர் துணிவுடன் பிடித்த காணொளி, உலகெங்கும் இனப்பாகுபாட்டுக்கு எதிரான இயக்கத்தைத் தூண்டியது என்று கூறப்பட்டது.

நீதியையும், உண்மையையும் கண்டுபிடிக்கும் நிருபர்களின் பணியில், குடிமக்கள் ஆற்றும் பங்கை அதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் Pulitzer விருது அமைப்பு தெரிவித்தது.

இன சமத்துவமின்மையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் COVID-19 நோய்த்தொற்று குறித்தும் செய்தி வழங்கிய நிறுவனங்களும் கௌரவிக்கப்பட்டன.

ஆக உயரிய விருது The New York Times நாளிதழுக்குச் சென்றது.

அமெரிக்கக் காவல் முறையில் நிலவிய இனச் சமத்துவமின்மை பற்றி விளக்கமாகத் தகவல் அளித்த Reuters செய்தி நிறுவனத்துக்கும் விருது வழங்கப்பட்டது.

The Atlantic சஞ்சிகை அந்த விருதைப் பகிர்ந்துகொண்டது.

COVID-19 நோய்த்தொற்று தொடர்பாக அது அளித்த தகவல்கள் பாராட்டப்பட்டன.

சிறந்த நிழற்படங்களை எடுத்து வழங்கிய Associated Press செய்தி அமைப்பும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்