Images
  • teenager saved (1)
    (படம்: REUTERS/Stringer)

இஸ்தான்புல்: கட்டட இடிபாடுகளில் இரண்டு நாள் சிக்கியிருந்த பதின்மவயது இளைஞன் மீட்பு

இஸ்தான்புல்லில் உள்ள 8 மாடி கட்டடம் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்னர் இடிந்து விழுந்தது.

கட்டட இடிபாடுகளில் இரண்டு நாள்களாக சிக்கியிருந்த 16 வயது இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 14 பேர் மாண்டதாகவும், 11 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மாண்டோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கட்டடத்தில் மூன்று மாடிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் உரிமம் இல்லாத ஜவுளித் தொழிற்சாலை ஒன்று இயங்கிவந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகே இருக்கும் 7 கட்டடங்கள் பாதுகாப்பு காரணமாக காலி செய்யப்பட்டன.

சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.

Top