Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செல்வந்தர் பெஸொஸுடன் விண்வெளிக்குச் செல்லவிருக்கும் இளையர்- யார் இவர்?

செல்வந்தர் பெஸொஸுடன் விண்வெளிக்குச் செல்லவிருக்கும் இளையர்- யார் இவர்?

வாசிப்புநேரம் -

ஆலிவர் டேமன் (Oliver Daemen) எனும் 18 வயது இளையருக்கு ஜெஃப் பெஸொஸுடன் (Jeff Bezos) விண்வெளிப் பயணம் செல்லும் அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

செல்வந்தர் பெஸோஸ் அமெரிக்க நேரப்படி, நாளை விண்வெளிக்குச் செல்லவிருக்கிறார்.

அவருடன் இணைந்து செல்ல, 28 மில்லியன் டாலர் பணம் செலுத்தி ஏலத்தை வென்றிருந்தார் ஆடவர் ஒருவர்.

ஏலத்தின் வெற்றியாளர் பெயர் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

விண்வெளிக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் வேறு சில பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், பயணத்தைக் கைவிடுவதாக அவர் அறிவித்தார்.

அதனையடுத்து, இளையர் டேமனுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.

டேமன் இயற்பியல் படிக்கும் (physics) மாணவர்.

டேமனின் தந்தை ஒரு முதலீட்டு நிர்வாக நிறுவனத்தின் தலைவர்.

அவர் தனது மகனின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற, இந்தத் தொகையைச் செலவிட்டு வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

நாளை, விமானம் 4 பயணிகளுடன் விண்வெளிக்குப் புறப்படுகிறது.

82 வயதான வாலி ஃபங்க் (Wally Funk), டேமன், செல்வந்தர் பெஸொஸ், அவரது சகோதரர் மார்க் பெசோஸ் ஆகியோர் விண்வெளிக்குச் செல்லவிருக்கின்றனர்.

இதில் என்ன ஓர் ஆச்சரியம் என்றால்.......
வயதான ஒருவரும், இளையர் ஒருவரும் இந்த அரிய விண்வெளிப் பயணத்தில் இணைகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்