Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இங்கிலாந்து: வாகனத்தால் 2 கிலோமீட்டர் தூரம் இழுக்கப்பட்டு இறந்துபோன காவல்துறை அதிகாரியின் வழக்கில் பதின்ம வயதினருக்கு 42 ஆண்டுகள் சிறை

பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியைக் கொன்ற குற்றத்திற்காக 3 பதின்ம வயதினருக்கு மொத்தம் 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இங்கிலாந்து: வாகனத்தால் 2 கிலோமீட்டர் தூரம் இழுக்கப்பட்டு இறந்துபோன காவல்துறை அதிகாரியின் வழக்கில் பதின்ம வயதினருக்கு 42 ஆண்டுகள் சிறை

(படம்: Jeremy Long)

பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியைக் கொன்ற குற்றத்திற்காக 3 பதின்ம வயதினருக்கு மொத்தம் 42 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குக் காவல்துறை அதிகாரியின் உடல் வாகனத்தின் பின்னால் இழுக்கப்பட்டது.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்தச் சம்பவம்.

4 சக்கர மோட்டார்சைக்கிளைத் திருடி, வாகனத்தில் தப்பி ஓடிய பதின்ம வயதினரைக் காவல்துறை அதிகாரி துரத்தியபோது அச்சம்பவம் நடந்தது.

பின், வாகனத்திலிருந்து பிரிந்த அந்த 28 வயது அதிகாரியின் உடல் சாலையில் கிடந்தது.

அந்த வாகனத்தை ஓட்டியவருக்கு 19 வயது. அவருக்கு 16 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வாகனத்தில் பயணம் செய்த இருவருக்கும் 18 வயது. அவர்களுக்கு 13 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மூவர் மீதும் தொடக்கத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டது.

அதனால், வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்று மாண்ட அதிகாரியின் மனைவி பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கடிதம் எழுதினார்.

மறுவிசாரணையின்போது, அந்த அதிகாரியின் உடல் வாகனத்தின் பின்னால் இழுக்கப்பட்டது அந்த மூவருக்கும் தெரிந்திருந்தது என்று அரசாங்கத் தரப்பு வாதிட்டது.

இளையர்களின் வழக்கறிஞர்கள், நடந்த சம்பவம் திட்டமிட்டு நடைபெறவில்லை என்று வாதிட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்