Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தடை

அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தடை

(படம்: AP Photo/Andrew Harnik)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கக் கணினித் தொழில்நுட்பக் கட்டமைப்பை, வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில், அதிபர் டிரம்ப் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்துள்ளார்.

எந்தவொரு நிறுவனத்தையும் அவர் தமது ஆணையில் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

என்றாலும், சீனத் தொலைத் தொடர்பு நிறுவனமான Huaweiயைக் குறிவைத்தே அத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர்.

சீனத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தயாரிப்புகள் கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறைகூறியிருந்தன. ஆனால், தங்கள் தயாரிப்புகளால் அப்படி எந்த மிரட்டலும் இல்லை என்று Huawei கூறியிருந்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்