Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவில் டெலகிராம் செயலிக்குத் தடை-ஏன்?

ரஷ்யாவில் டெலகிராம் செயலிக்குத் தடை-ஏன்?

வாசிப்புநேரம் -
ரஷ்யாவில் டெலகிராம் செயலிக்குத் தடை-ஏன்?

(படம்: AFP/Alexander NEMENOV)

தகவல் பரிமாற்றச் செயலியான டெலகிராமுக்கு ரஷ்யா தடை விதித்திருக்கிறது.

தனிநபர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களைத் தெரிந்துகொள்ள அரசாங்க பாதுகாப்பு அமைப்புக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ரஷ்யா கேட்டுக்கொண்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து, செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்கள், படங்கள், காணொளிகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள டெலகிராம் செயலி பயன்படுத்தப்பட்டுவருகிறது.

செயலியில், 5,000பேர் வரையிலான குழுவை அமைத்துத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

2013-ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட செயலியைச் சுமார் 200 மில்லியன் பேர் பயன்படுத்திவருகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்