Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பயங்கரவாத நடவடிக்கைகளால் மாண்டோர் எண்ணிக்கை 4ஆவது ஆண்டாக குறைந்தது

பயங்கரவாத நடவடிக்கைகளால் மாண்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது ஆண்டாகச் சென்ற வருடம் குறைந்தது.

வாசிப்புநேரம் -
பயங்கரவாத நடவடிக்கைகளால் மாண்டோர் எண்ணிக்கை 4ஆவது ஆண்டாக குறைந்தது

(படம்: REUTERS)

பயங்கரவாத நடவடிக்கைகளால் மாண்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது ஆண்டாகச் சென்ற வருடம் குறைந்தது.

சென்ற ஆண்டு சுமார் 16,000 பேர் பயங்கரவாதச் செயல்களால் மாண்டனர்.

அந்த எண்ணிக்கை, 2014ஆம் ஆண்டில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி.

மாண்டோர் எண்ணிக்கை குறைந்தாலும் பயங்கரவாத அமைப்புகளின் தாக்கம் கூடுதலாக உணரப்பட்டதாய்த் தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு 71 நாடுகளில் குறைந்தது ஒருவர் பயங்கரவாதச் செயல்களால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Global Terrorism Index எனப்படும் உலக பயங்கரவாத அறிக்கை அந்த விவரங்களைத் தெரிவித்தது.

ஆஸதிரேலியாவின் சிட்னி நகரின் பொருளியல், அமைதி ஆய்வு நிலையம் அந்த அறிக்கையை வெளியிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்