Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சாக்லெட்டால் வந்த வினை - Tescoமீது இந்திய வழக்குரைஞர் வழக்கு

பிரிட்டனின் ஆகப் பெரிய பேரங்காடியான Tesco மீது, வழக்குத் தொடுத்துள்ளார் இந்திய வழக்குரைஞர் ஒருவர்.

வாசிப்புநேரம் -

பிரிட்டனின் ஆகப் பெரிய பேரங்காடியான Tesco மீது, வழக்குத் தொடுத்துள்ளார் இந்திய வழக்குரைஞர் ஒருவர்.

அந்தப் பேரங்காடி ஊழியர்கள் தம்மை முரட்டுத்தனமாகக் கையாண்டதால் தமது சிறுநீரகத்தில் இருந்த கல் இடம்பெயர்ந்துவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த 63 வயது லாலு ஹனுமான் பேரங்காடி நிறுவனத்தின் மீது 91,451 டாலர் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்துள்ளார்.

திரு. ஹனுமான் 1.37 டாலர் விலைகொண்ட சாக்லெட்டைப் பேரங்காடியில் வாங்கியிருக்கிறார்.

அதற்குத் தானியக்கச் சேவை இயந்திரம் வழி பணம் செலுத்தியிருக்கிறார்.

ஆனால், உடனடியாக அவர் பணம் செலுத்திய ரசீதைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார்.

கடைக்கு வெளியில் இருந்த பாதுகாவலர் திரு. ஹனுமான் சாக்லெட்டுக்குப் பணம் செலுத்தாமல் அதை எடுத்துச் செல்வதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

தாம் பணம் செலுத்திவிட்டதாகத் திரு. ஹனுமான் சொன்னதை அவர் நம்பவில்லை.

அத்துடன் நில்லாமல், பாதுகாவலர் திரு. ஹனுமானைப் பலவந்தமாக கடைக்கு உள்ளே அழைத்துச்சென்றதாக NDTV கூறியுள்ளது.

இதனால் தன்னுடைய சிறுநீரகத்தில் இருந்த கல் இடம்பெயர்ந்ததாக திரு. ஹனுமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இயந்திரத்தில் பணம் செலுத்தும்போது ஏற்பட்ட தவற்றால் இந்தக் குழப்பம் சம்பவம் நேர்ந்ததை Tesco ஒப்புக்கொண்டுள்ளது.

இழப்பீட்டு வழக்கு, ஜூலை 21 அன்று விசாரணைக்கு வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்