Images
  • 18 apr tesla (1)
    படம்: REUTERS/Kim Hong-Ji

ரஷ்யா: லாரியை மோதி தீப்பற்றிக் கொண்ட Tesla மின்-கார்

Tesla நிறுவனத்தைச் சேர்ந்த மின்-கார் ஒன்று லாரியின்மீது மோதி தீப்பற்றிக் கொண்டது. மாஸ்கோ விரைவுச்சாலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கார் தீப்பற்றி எரியும் காட்சியை அந்நாட்டின் Rossiya 24 ஒளிவழி காட்டியது. பதிவுசெய்யப்பட்ட காட்சியில் கார் கரும்புகையால் சூழப்பட்டிருந்தது.
சில விநாடிகள் இடைவெளியில் இரண்டு சிறு வெடிப்புகளும் நிகழ்ந்தன.

தீப்பற்றி எரிந்த கார் எந்த ரகம் என்று தெரியவில்லை. காரின் உலோக விளிம்பு மட்டுமே எஞ்சியிருந்தது.  

Top