Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அமெரிக்கா: டெக்சஸ் மாநிலத்தில் குண்டுவெடிப்பு - ஒருவர் மரணம், 2 பேர் காயம்

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்தின்  நகரில், நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பதின்ம வயது இளையர் மாண்டார்; மேலும் இரு பெண்கள் காயமுற்றனர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: டெக்சஸ் மாநிலத்தில் குண்டுவெடிப்பு - ஒருவர் மரணம், 2 பேர் காயம்

டெக்சஸ் நகரம். (படம்: AFP)

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்தின் நகரில், நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பதின்ம வயது இளையர் மாண்டார்; மேலும் இரு பெண்கள் காயமுற்றனர்.

வெவ்வேறு இடங்களில், இரு பொட்டலங்களில் இருந்த குண்டுகள் வெடித்ததாய் உள்ளூர் காவல்துறைத் தலைவர் பிரையன் மென்லி தெரிவித்தார். 10 நாட்களுக்கு முன்னர் ஆடவர் ஒருவரைப் பலிவாங்கிய குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் அண்மைச் சம்பவங்களுக்குத் தொடர்பு இருப்பதாய் நம்பப்படுகிறது.

அது பயங்கரவாதச் செயல் என்பதற்கான அறிகுறி இல்லை; வெறுப்பினால் விளைந்த குற்றச்செயலாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை எனத் திரு. மென்லி குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்