Images
  • walmart shoot
    (படம்:KTSM 9/ KTSM 9 news Channel /AFP)

டெக்சஸ் மாநிலத் துப்பாக்கிச் சூடு- வெறுப்புணர்வு காரணமா?

அதன் தொடர்பில் அதிகாரிகள் கைது செய்த ஆடவர் வெறுப்புணர்வு காரணமாக அந்தக் குற்றத்தை புரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக காவல்துறை தெரிவித்தது .

சந்தேக நபர் சம்பவம் நடந்த El Paso நகரைச் சார்ந்தவர் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.

விசாரணை தொடர்வதால், மாண்டோரின் சடலங்கள் சம்பவ இடத்திலேயே விட்டுவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.

அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவி செய்து வருவதாக டெக்ஸஸ் ஆளுநர் கிரெக் அபெட் (Greg Abbott) கூறினார்.

மாண்டோரில் மூவர் தங்கள் குடிமக்கள் என்று மெக்சிகோ கூறியது.

2017 நவம்பர் மாதம் டெக்சஸ் தேவாலயம் ஒன்றில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். வால்மார்ட் பேரங்காடியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அதற்கு அடுத்து நிகழ்ந்திருக்கும் ஆக மோசமானது.  

Top