Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டெக்சஸ் தாக்குதல்: மகன் துப்பாக்கி வைத்திருந்தது குறித்து காவல்துறையிடம் தாயார் எச்சரித்திருந்தார்

அமெரிக்க மாநிலமான டெக்சஸின் எல் பாசோ நகரத் தாக்குதலை நடத்திய ஆடவர், துப்பாக்கி வைத்திருந்தது குறித்து அவரது தாயார் ஏற்கனவே காவல்துறையிடம் எச்சரித்ததாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -


அமெரிக்க மாநிலமான டெக்சஸின் எல் பாசோ நகரத் தாக்குதலை நடத்திய ஆடவர், துப்பாக்கி வைத்திருந்தது குறித்து அவரது தாயார் ஏற்கனவே காவல்துறையிடம் எச்சரித்ததாக CNN செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

துப்பாக்கி வைத்திருக்கும் தமது 21 வயது மகனுக்கு அதைக் கையாளும் பக்குவம் இருக்கிறதா, அனுபவம் இருக்கிறதா என்று அவனது தாய்க்குச் சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரை அழைத்து அது குறித்துத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் தாயாரின் அழைப்பு, தகவலை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்ததே தவிர, எச்சரிக்கை விடுக்கும் விதத்திலோ, அவரது மகன் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடியவர் என்ற தொனியிலோ இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த சனிக்கிழமை Walmart பேரங்காடியில் நடந்த அந்தச் சம்பவத்தில் 22 பேர் மாண்டனர்.

ஆடவரின் தாயார் குறிப்பிட்ட துப்பாக்கிதான் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை 'வெறுப்புணர்வு', 'உள்நாட்டு பயங்கரவாதம்' என்று வகைப்படுத்தி, காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்