Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: டெக்சஸில் COVID-19 தடுப்பூசி கட்டாயம் - எதிர்க்கும் மாநில ஆளுநர்

அமெரிக்கா: டெக்சஸில் COVID-19 தடுப்பூசி கட்டாயம் - எதிர்க்கும் மாநில ஆளுநர்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் COVID-19 தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு எதிராக அதன் ஆளுநர் கிரெக் அபோட் (Greg Abbott) நிர்வாக ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளார்.

தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் அந்த ஆணை பொருந்தும்.

COVID-19 நோயிலிருந்து தற்காப்புப் பெற தடுப்பூசியே ஆகச் சிறந்தது என்பதை ஒப்புக்கொள்வதாகக் கூறினார் திரு. எபாட்

ஆனால் அது சுயமாக எடுக்கவேண்டிய முடிவு என்பதை அவர் வலியுறுத்தினார்.

மேலும் அதிகமானோரைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவித்துவரும் அதிபர் ஜோ பைடனின் உத்தரவுக்கு எதிரானது அது.

ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கும்படி நாடு முழுதும் உள்ள அனைத்து நிறுவனங்களையும் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு செய்யாத ஊழியர்கள் வேலைகளை இழக்க நேரிடலாம்.

மத்திய அரசாங்க ஊழியர்களும் குத்தகையாளர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கும் இரண்டு நிர்வாக ஆணைகளைக் கடந்த வாரம் அதிபர் பைடன் பிறப்பித்திருந்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்