Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாய்லந்து சரணாலயத்தில் யானைகளின் மறுவாழ்வுக்குப் புதிய வழி

Elephants World என்பது தாய்லந்தின் காஞ்சனபுரியில் இருக்கும் யானைகளுக்கான சரணாலயம்.

வாசிப்புநேரம் -
தாய்லந்து சரணாலயத்தில் யானைகளின் மறுவாழ்வுக்குப் புதிய வழி

(படம்:Reuters/Soe Zeya Tun)

வயது முதிர்ந்த, உடற்குறையுள்ள யானைகளுக்கு தாய்லந்து சரணாலயம் ஒன்றில் புதிய வகை மருந்து அளிக்கப்படுகிறது.

Elephants World என்பது தாய்லந்தின் காஞ்சனபுரியில் இருக்கும் யானைகளுக்கான சரணாலயம்.

அங்கு யானைகள் மீண்டும் வலிமை பெற சிறப்பு உணவுகள் அளிக்கப்படுகின்றன; நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன; பார்வையற்ற, உடற்குறையுடைய யானைகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, யானைகளின் பெரிய செவிகளுக்கு இசை விருந்தும் வழங்கி மகிழ்விக்கிறது சரணாலயம்.

அவற்றுக்குப் புத்துணர்வூட்ட பியானோ இசை வாசிக்கப்படுகிறது.

வாரத்திற்குச் சில முறை பிரட்டனைச் சேர்ந்த இசைக் கலைஞர் பால் பார்ட்டன் (Paul Barton) தமது யானை நண்பர்களுக்கு பியானோ இசைத்துக் காட்டுகிறார்.

57 வயது பாலின் ரம்மியமான இசைமழையில் நனைந்து யானைகளும் அமைதியாகின்றன. சில சமயங்களில், அவை இசைக்கேற்றவாறு தலையை ஆட்டி ரசிக்கின்றன.

யானைகளின் மனத்துக்குப் புத்துணர்வூட்ட இசை உதவுகிறது என்கிறார் பாலின்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்