Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Thanksgiving கொண்டாட்டங்களுக்கு முன் வசதி குறைந்தவர்களுக்கு 100,000 உணவுப் பொட்டலங்களை வழங்கத் திட்டமிடும் அமெரிக்கச் சிறுவன்

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் Thanksgiving கொண்டாட்டங்களுக்கு முன்னர், வசதி குறைந்தவர்களுக்கு 100,000 உணவுப் பொட்டலங்களை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளான் 10 வயதுச் சிறுவன் ஒராயன் ஜீன் (Orion Jean).

வாசிப்புநேரம் -
Thanksgiving கொண்டாட்டங்களுக்கு முன் வசதி குறைந்தவர்களுக்கு 100,000 உணவுப் பொட்டலங்களை வழங்கத் திட்டமிடும் அமெரிக்கச் சிறுவன்

(படம்: YouTube/McDonald Jean)

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் Thanksgiving கொண்டாட்டங்களுக்கு முன்னர், வசதி குறைந்தவர்களுக்கு 100,000 உணவுப் பொட்டலங்களை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளான் 10 வயதுச் சிறுவன் ஒராயன் ஜீன் (Orion Jean).

"Race to 100K Meals" எனும் திட்டத்தை வழிநடத்துகிறான் சிறுவன். திட்டத்தில் பங்குபெற்றுள்ள இடங்களில் தொண்டூழியர்கள் உணவுப் பொட்டலங்களையும் நன்கொடைகளையும் வழங்கலாம்.

இவ்வாண்டின் நோய்ப்பரவல் சூழலுக்கு இடையில் மற்றவர்களுக்கு உதவுவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று சிறுவன் CNN செய்தி நிறுவனத்திடம் கூறினான்.

சிறுவன் வழங்கும் ஒவ்வொரு உணவுப் பொட்டலத்திலும், தண்ணீர், பழம், granola bar எனும் தானிய உணவுப் பொருள் ஆகியவை உள்ளன. உணவுகளைப் பெறுபவர்களுக்குத் தொண்டூழியர்கள் ஊக்கமூட்டும் கடிதங்களையும் இணைத்து அனுப்பலாம்.

சிறுவனின் முயற்சியைக் கண்டு Yogurt நிறுவனம் ஒன்று 100,000 பொட்டலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இதுவரை 58,000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கொண்டாட்டங்களுக்கு முன்பாக நிச்சயம் தனது இலக்கை எட்டமுடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறான் ஜீன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்