Images
  • moon (1)
    படம்: NASA/AFP / HO

நிலவு சுருங்குகிறது: ஆய்வு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நிலவு படிப்படியாகச் சுருங்கி வருவதாய் Nature Geoscience சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் சுருக்கங்கள் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA வெளியிட்ட படத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது அறியப்படுகிறது.

நிலவில் டெக்டானிக் தட்டுகள்( tectonic plate) இல்லை. ஆனால் அங்கு டெக்டானிக் செயல்பாடு உள்ளது.

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவு உருவானது. அன்று முதல் நிலவு வெப்பத்தை மெதுவாக இழந்துவருகிறது.

அதன் காரணமாக நிலவின் மேற்பரப்பு சுருங்கியுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Top