Images
  • robot-1
    படம்: Matthew Stock/Reuters

புதிய கலைஞர் ஓர் இயந்திரத்தின் வடிவில்?

மனித இயந்திரங்களிடத்திலும் வித்தியாசமான கலைப் படைப்புகளை எதிர்பார்க்க முடியுமா? முடியும் என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த ஏய்டன் மெல்லர் (Aidan Meller).


கோர்ன்வாலிலுள்ள (Cornwall) பொறியியல் கலைத்துறை நிபுணர்களுடன் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மெல்லர்.

மனித இயந்திரத்தை Ai-Da என்று அவர் செல்லமாக அழைக்கிறார்.


செயற்கை நுண்ணறிவால் செயல்படும் அதனை மனிதர்களுக்குச் சமமாக வேலைகள் செய்ய வைப்பது மெல்லரின் இலக்கு.

Ai-Daவின் தலை ஒரு பக்கமாகவும், கை ஒரு பக்கமாகவும் இருந்தால்கூட கண் பார்ப்பதைக் கை வரையும்.

அது மட்டுமல்லாமல் அது மனிதர்களுடன் தொடர்புகொள்ளும் ஆற்றலையும் பெற்றுள்ளது.

கேள்விகளுக்குப் பதில் அளிப்பது, ஒருவர் எங்கு செல்கிறாரோ அவரை உற்று கவனிப்பது, மிக அருகே வந்தால் நகர்ந்து விடுவது போன்று மனிதர்களின் இயல்பில் பலவற்றைக் கொண்டுள்ளது Ai-Da.

Ai-Da முழு வடிவம் பெற இன்னும் சில காலம் எடுக்கும். வெவ்வேறு இனத்தினரின் சாயல் அதனிடம் தென்படுவதுபோல Ai-Da வடிவமைக்கப்படும்.

வளர்ந்து வரும் கலைஞராகிய Ai-Daவின் கலைப்படைப்புகள் முதல் முறையாக நவம்பரில் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகக் கண்காட்சியில் வைக்கப்படும்.


Top