Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்த பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (Theresa May) தமக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துள்ளார்.  

வாசிப்புநேரம் -
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்த பிரிட்டிஷ் பிரதமர்

(படம்: AP/Tim Ireland)

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே (Theresa May) தமக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 200க்கு 117 எனும் எண்ணிக்கையில் அவர் வெற்றிபெற்றார்.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை வழிநடத்துவதற்குத் திருமதி மே பொருத்தமானவர் அல்ல என்று 117 பேர் கருதுகின்றனர்.

கடந்த மாதம் திருமதி மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையைக் குறைகூறிய அவரின் கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சியில் உள்ள பிரெக்சிட் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தனர்.

அவருக்குக் கிடைத்திருக்கும் வெற்றி வரும் ஓராண்டுக்கு அவர் கட்சிக்குள் எவ்வித எதிர்ப்புமின்றிச் செயல்படுவதற்கு வழிவிட்டுள்ளது.

இருப்பினும் அவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு முன் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குள் தாம் பதவி விலகவிருப்பதாக உறுதியளித்த பின்னரே அவரின் சகாக்கள் அவருக்கு ஆதரவளித்ததாக நம்பப்படுகிறது.

வாக்கெடுப்பில் திருமதி மே தோல்வியடைந்திருந்தால்
திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முடியாது.
  

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்