Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள மாளிகையில் 30 ஆண்டுகளுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட சடலம்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள மாளிகை ஒன்றின் சீரமைப்புப் பணிகளின்போது 30 ஆண்டுகளுக்கு முன் மாண்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள மாளிகையில் 30 ஆண்டுகளுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட சடலம்

படம்: George Kaplan/Twitter

பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள மாளிகை ஒன்றின் சீரமைப்புப் பணிகளின்போது 30 ஆண்டுகளுக்கு முன் மாண்ட ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரிஸின் மதிப்புமிக்க வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த மாளிகையின் மதிப்பு, 35 மில்லியன் யூரோ.

அதன் அடித்தளத்தில் சடலம் இருந்தது.

அது 30 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாய்க் கிடந்ததாக, The Guardian செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அதன் உரிமையாளரான நெதர்லந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அதை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏலத்தில் விற்றது.

ஏலம் தொடங்கிய சுமார் 15 நிமிடத்தில், ஆரம்ப விலையைவிட 6 மடங்கு அதிக விலையில் அது ஏலம் போனது.

சீரமைப்புப் பணிக்காக மாளிகையில் உள்ள இடிபாடுகளை அகற்றும்போது, அந்தப் பிணம் இருந்தது தெரிய வந்ததாக The Guardian கூறியது.

உடைந்த எலும்புகள், வெட்டுக் காயங்கள் ஆகியவை சடலத்தில் காணப்பட்டதால், காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பிணத்தில் இருந்த ஆவணங்களைக் கொண்டு அது யார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், கொலை செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்று காவல்துறை கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்