Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் TikTok, WeChat போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

சென்ற ஆண்டு இறுதியில் TikTok தளத்தை நிர்வகிக்கும் ByteDance நிறுவனம் அமெரிக்காவில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் TikTok, WeChat போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(படம்:REUTERS/Florence Lo)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், TikTok, WeChat போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருக்கிறார்.

அவற்றுக்குத் தடை விதிக்கும் நிர்வாக ஆணைகளை அவர் ரத்து செய்தார்.

கோவிட்-19 நோய்ப்பரவலுக்குச் சீனாவைத் தண்டிப்பதாகக் கூறி, முன்னைய அதிபர் டோனல்ட் டிரம்ப் சென்ற ஆண்டு ஜூலையில் TikTok தளத்தை தடை செய்தார்.

சென்ற ஆண்டு இறுதியில் TikTok தளத்தை நிர்வகிக்கும் ByteDance நிறுவனம் அமெரிக்காவில் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

அதன் பின்னர், Microsoft, Oracle உள்ளிட்ட நிறுவனங்கள் ByteDanceஇன் ஒரு பகுதியை வாங்குவதில் ஆர்வம் காட்டின.

தற்போது தடைகள் தளர்த்தப்பட்டாலும், சீனா உட்பட, அமெரிக்காவுடன் பகைமை கொண்ட அனைத்து நாடுகளின் செயலிகளையும் ஆராயும்படி திரு. பைடன் உத்தரவிட்டிருக்கிறார்.

அந்தச் செயலிகளால் விளையக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மறுஆய்வு செய்யப்படும்.

அத்தகைய செயலிகளுக்கு அமெரிக்கர்கள் அளிக்கும் தரவுகளும் கவனத்தில் கொள்ளப்படும்.
பைடன் நிர்வாகம், தனிப்பட்ட நிறுவனங்களைக் குறிவைத்துத் தடை விதிப்பதில் தீவிரம் காட்டவில்லை.

இருப்பினும், TikTok போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்