Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பெரு: விலங்குத் தோட்டப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் புலிக்குட்டிகள்

பெரு தலைநகர் லிமா(Lima)வில் உள்ள விலங்குத் தோட்டத்திற்கு 3 புதிய வரவுகள்.

வாசிப்புநேரம் -
பெரு: விலங்குத் தோட்டப் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் புலிக்குட்டிகள்

(படம்: Pixabay)


பெரு தலைநகர் லிமா(Lima)வில் உள்ள விலங்குத் தோட்டத்திற்கு 3 புதிய வரவுகள்.

வருகையாளர்கள், பராமரிப்பாளர்கள் அனைவருக்கும் செல்லப் பிள்ளைகளாகிவிட்டன வங்காளப் புலிக் குட்டிகள்.

அவற்றில் ஒன்று அரிதான வெள்ளைப் புலி என்பது கூடுதல் சிறப்பு.

புலிக் குட்டிகளுக்குப் பெயர் சூட்ட சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்துள்ளது விலங்கியல் தோட்டம்.

ஓராண்டுக்கும் மேலான கடின முயற்சியின் பலனாய் அந்தப் புலிக் குட்டிகள் பிறந்ததாய் அது குறிப்பிட்டது.

குட்டிகளும், அவற்றின் பெற்றோரும் நலம் என்றும் அது தெரிவித்தது.

கடத்தல், வனப் பகுதிகள் அழிப்பு, இயற்கைச் சூழலில் இரை கிடைக்காதது போன்ற காரணங்களால் வங்காளப் புலிகள் அருகிவரும் இனமாக ஆகிவிட்டன.

உலகெங்கும் வனப் பகுதிகளில் அதிகபட்சம் ஏழாயிரம் வங்காளப் புலிகளே எஞ்சியிருப்பதாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்