Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆண் புலியுடன் ஏற்பட்ட மோதலில் மாண்ட பெண் புலி

லண்டன் விலங்குத் தோட்டத்தில் இரு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமத்திரா புலி மாண்டுவிட்டது.

வாசிப்புநேரம் -
ஆண் புலியுடன் ஏற்பட்ட மோதலில் மாண்ட பெண் புலி

படம்: AFP/Jean-Francois Monier

லண்டன் விலங்குத் தோட்டத்தில் இரு புலிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுமத்திரா புலி மாண்டுவிட்டது.

7 வயது ஆண் புலி அசிம் (Asim) தாக்கியதில், 10 வயது மெலாட்டி (Melati)காமடைந்து மாண்டது.

டென்மார்கிலிருந்து லண்டன் விலங்குத் தோட்டத்துக்கு அசிம் 10 நாள்களுக்கு முன்னர் கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு நீண்ட காலமாகவே வசித்து வந்தது மெலாட்டி என்ற பெண் புலி.

இரு புலிகளும் ஒரே கூண்டில் வைக்கப்பட்டன.

அசிமும் மெலாட்டியும் குட்டிகளை ஈன்றெடுக்கும் என்று நினைத்த விலங்குத் தோட்ட அதிகாரிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இரு புலிகளும் மோதிக்கொண்டதில் அழிவை எதிர்நோக்கிவரும் சுமத்திரா புலி ரகத்தை சேர்ந்த மெலாட்டி பலியானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்