Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் TikTok செயலியைத் தடைசெய்யவிருக்கும் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் TikTok செயலியைத் தடைசெய்யவிருக்கும் அதிபர் டிரம்ப்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் TikTok செயலியைத் தடைசெய்யவிருக்கும் அதிபர் டிரம்ப்

(கோப்புப் படம்: Reuters / Kevin Lamarque)

அமெரிக்காவில் TikTok செயலியைத் தடைசெய்யவுள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அது குறித்த நிர்வாக ஆணையில் இன்றே கூட தாம் கையெழுத்திடலாம் என்று அவர் கூறினார்.

அண்மை வாரங்களில், TikTok செயலி, சீனாவுக்காக வேவு பார்க்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து, அதிபர் டிரம்ப் அவ்வாறு தெரிவித்தார்.

இருப்பினும், சீன அரசாங்கத்துடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

இதற்கு முன்னர் TikTok செயலியின் அமெரிக்க நடவடிக்கைகள் அதன் சீனத் தாய் நிறுவனமான ByteDanceஇடமிருந்து பிரிக்கப்படுவதற்கு அதிபர் டிரம்ப் உத்தரவிடுவார் என்று கூறப்பட்டது.

இருப்பினும், Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் TikTok செயலியை வாங்குவது பற்றி வெள்ளை மாளிகை, ByteDance ஆகியவற்றுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு காணப்படவில்லை.

செயலி தடைசெய்யப்பட்டால், ByteDance பெருமளவில் பாதிப்படையலாம்.

உலகளவில் செயல்படும் சீன வர்த்தகக் குழுமங்களில் ஒன்றாக அது திகழ்வதற்கு TikTok செயலியே முக்கியக் காரணமாக இருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்