Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் TikTok செயலி

அமெரிக்காவில் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் TikTok செயலி

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் TikTok செயலி

(படம்: AFP)

சீனாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ByteDance நிறுவனத்தின் TikTok செயலிக்கு அமெரிக்காவில் நெருக்குதல் அதிகரித்துள்ளது.

தேசியப் பாதுகாப்பு அம்சங்களின் அடிப்படையில் அந்தச் செயலியின் நடைமுறைகள் குறித்த ஆய்வு நிறைவடைந்திருப்பதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்டீவன் மெனுச்சின் (Steven Mnuchin) கூறினார்.

ஆய்வு முடிவின் பரிந்துரைகள் வெள்ளை மாளிகையிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

TikTok செயலிக்கும், சீன அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டை TikTok செயலி தொடர்ந்து மறுத்து வருகிறது.

என்றாலும், அமெரிக்கா அதன் தொடர்பில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்பதால், TikTok செயலி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நவம்பரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கு அந்தச் செயலியின் மூலம் என்ன தீங்கு நேரும் என்பதை ஆராய வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.

அதன் தொடர்பில் தம்முடைய நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும், விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

இந்நிலையில், குறுகிய நேரக் காணொளிகளை வெளியிட உதவும் TikTok செயலி மூலம், அமெரிக்கத் தேர்தலில் தலையிட முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைச் சீனா நிராகரித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்