Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

TikTokஇன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சிங்கப்பூரர்

TikTokஇன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சிங்கப்பூரரான ஷாவ் ஸி சியூ (Shou Zi Chew) நியமிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
TikTokஇன் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சிங்கப்பூரர்

(படம்: Twitter/Shou Zi Chew)

TikTokஇன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சிங்கப்பூரரான ஷாவ் ஸி சியூ (Shou Zi Chew) நியமிக்கப்பட்டுள்ளார்.

Xiaomi நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த சியூ சென்ற மாதம் TikTokஇன் உரிமையாளரான ByteDance நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார்.

சிங்கப்பூரில் வசிக்கும் சியூ TikTokஇன் அடுத்தக்கட்ட வெற்றிக்காகத் தொடர்ந்து வலுவான நிர்வாகக் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.

TikTokஇன் எதிர்பாரா வெற்றியை ஆதரிக்கவும் அதன் உலகளாவிய குழுக்களை மேம்படுத்தவும் சியூவின் நியமனம் உதவும் என்று கூறப்படுகிறது.

தொழில்நுட்பத் துறையில் 10 ஆண்டுகளாக வேலை செய்துவரும் சியூவின் ஆழமான அனுபவம் பயனளிக்கும் என்று ByteDance நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யிமிங் ஸாங் (Yiming Zhang) குறிப்பிட்டார்.

சியூ தமது இளங்கலைக் கல்வியை லண்டனிலும் முதுகலைக் கல்வியை Harvard பல்கலையிலும் முடித்தவர்.

2015லிருந்து 2020ஆம் ஆண்டுவரை அவர் Xiaomi நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பணியாற்றினார்.

- Agencies/aj

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்