Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பில்லியன் டாலருக்கு அதிபதியானார் Apple நிறுவனத்தின் டிம் குக்

பில்லியன் டாலருக்கு அதிபதியானார் Apple நிறுவனத்தின் டிம் குக்

வாசிப்புநேரம் -

Apple நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. டிம் குக் (Tim Cook) பில்லியன் டாலருக்கு அதிபதியாகியுள்ளார்.

அந்நிறுவனத்தின் பங்கு விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதே அதற்குக் காரணம்.

847,969 பங்குகளின் உரிமையாளரான திரு. குக், சென்ற ஆண்டு சுமார் 125 மில்லியன் டாலரை ஈட்டினார்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகளால் பலரும் தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், தொழில்நுட்ப நிறுவனங்களான Apple, Facebook, Amazon ஆகியவற்றின் லாபம் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருவதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கூடிய சீக்கிரம், Apple நிறுவனம் 2 டிரில்லியன் டாலர் மதிப்புக் கொண்ட முதல் நிறுவனமாக வளரும் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலான தமது சொத்துகளை நன்கொடையாக வழங்கப் போவதாய் 2015ஆம் ஆண்டில் திரு. குக் சொன்னார்.

அதற்கேற்ப, பல மில்லியன் டாலர் மதிப்பிலான Apple பங்குகளை அவர் ஏற்கனவே நன்கொடையாக வழங்கிவிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்