Images
  • tintin
    (படம்: AFP/EMMANUEL DUNAND)

90ஆம் ஆண்டுநிறைவைக் கொண்டாட புதிய டின்டின் நூல், திரைப்படம்

உலகெங்கும் பல சிறுவர்களைச் சிரிக்க, சிந்திக்க வைக்கும் டின்டின் (Tintin) கேலிச்சித்திரங்கள் வெளியாகி நேற்று முன்தினமோடு 90 ஆண்டுகள் ஆகியுள்ளன.

அதைத் தொடர்ந்து டின்டினைப் பற்றிய புதிய கேலிச்சித்திர நூலும் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று நூல்களை வெளியிட்ட Casterman பதிப்பகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டின்டினை நாயகனாகக் கொண்ட திரைப்படம் 2011இல் வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு திரைப்படம் வெளியாகும் என்று Casterman உறுதி செய்தது.

திரைப்படம், எதைப் பற்றி இருக்கும் என்ற ஊகங்கள் கிளம்பத் தொடங்கிவிட்டன.

பெல்ஜிய சஞ்சிகையில் முதன்முதலில் 1929ஆம் ஆண்டில் டின்டினைப் பற்றிய கேலிச்சித்திரங்கள் வெளியாகின.

அதை அடுத்து, டின்டின் கேலிச்சித்திரத்தின் ஓவியர் எர்ஜே (Hergé), Le Thermozero என்ற தலைப்பில் ஒரு டின்டின் நூலிற்கான ஓவியங்களைத் தீட்டத் தொடங்கினார்.

நூலின் கதையைச் சிந்தித்து வைத்த அவர், அதன் ஓவிய வேலைகளைத் திடீரென்று 1960ல் கைவிட்டார். நூலின் முதல் 8 பக்கங்களையே வரைந்து முடித்தார்.

நூலை முழுமையாக முடித்து இந்த ஆண்டு வெளியிட Casterman விருப்பம் தெரிவித்தது.
 

Top