Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உறைபனியால் துண்டிக்கப்பட்ட மனிதக் கால் விரல் கொண்ட பானத்தைக் குடிக்க விருப்பமா?

கனடாவின் யுக்கோன் நகரில், Downtown Hotel எனப்படும் விடுதி விற்கும் பானங்களில் ஒரு சிறப்பு பானம் உள்ளது.

வாசிப்புநேரம் -
உறைபனியால் துண்டிக்கப்பட்ட மனிதக் கால் விரல் கொண்ட பானத்தைக் குடிக்க விருப்பமா?

படம்: DOWNTOWN HOTEL

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

கனடாவின் யுக்கோன் நகரில், Downtown Hotel எனப்படும் விடுதி விற்கும் பானங்களில் ஒரு சிறப்பு பானம் உள்ளது.

Sourtoe cocktail எனப்படும் அந்த மதுபானத்தின் சிறப்பு அதில் போடப்படும் பதப்படுத்தப்பட்ட மனிதக் கால் விரல்.

'மம்மியாக' பதப்படுத்தப்பட்ட மனித விரலை முத்தமிடுவது போல உதடுகளால் தொட்டவாறு பானத்தைக் குடிக்கவேண்டும்.

அவ்வாறு குடிப்பவர்களுக்குச் சான்றிதழ் கொடுக்கப்படும்.

கடையில் கால் விரலைப் பானத்தில் பயன்படுத்தும் வழக்கம் 1973ஆம் ஆண்டில் தொடங்கியது.

அதைப்போன்று சுமார் 86,000 பானங்கள் விற்கப்பட்டுள்ளன.

பானங்களில் விரலைச் சேர்க்க அந்தக் கடையில் எப்பொழுதும் சுமார் 5 கால் விரல்கள் தயாராக உள்ளன.

ஆனால் கடையில் காலின் பெருவிரல் மட்டும் இல்லை.

கடைக்குக் காலின் பெருவிரலைத் தானமாக கொடுக்க இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடவர் முன்வந்துள்ளார்.

நிக் கிரிஃபித்ஸ் (Nick Griffiths) எனப்படும் அந்த 47 வயது ஆடவர் குளிர்காலத்தில் நடத்தப்பட்ட ஒரு நெடுந்தொலைவு ஓட்டத்தில் பங்கெடுத்தார்.

அப்போது அவருடைய காலின் பெரு விரல் உறைபனியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

கிரிஃபித்ஸ் அந்த விரலை இழந்தார்.

Downtown விடுதிக்குத் தானம் செய்யப்பட்ட கிரிஃபித்ஸின் விரல் சுமார் 6 வாரங்களுக்குப் பதப்படுத்தப்பட்டு பானங்களில் சேர்க்கப்படும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்